தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

2022 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு, வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மக்கள் தத்தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களிடம் சென்று அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் www.elections.gov.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின், ஜூலை 12ஆம் திகதிக்கு முன்னதாக 011 2 860 034 என்ற எண்ணுக்குத் அறியத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.