
தேயிலை தொழிற்சாலையில் தீ : முற்றாக தீயில் கருகிய தேயிலை
புஸ்ஸல்லாவ – வஹுகபிட்டிய பிரதேசத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.
பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்திய போதிலும், தேயிலை தொழிற்சாலைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும், தேயிலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டிருந்த தேயிலை தீக்கிரையாகி முற்றாக நாசமாகியுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்அனடுக்கப்பட்டுள்ளன.
