தேயிலை செடிகளுக்குள் புகுந்த கார்

அதிவேகமாக வந்த காரொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்தோடி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி கார் அதிவேகமாக செலுத்தப்பட்டுள்ளது. அப்போது நாயொன்று வீதியை கடக்க முட்பட்டுள்ளது, இதன் போது நாயை காப்பாற்றும் முயற்சியால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் தேயிலை செடிகளுக்குள் பாய்ந்துள்ளது.

விபத்தின் போது, ​​காரில் நான்கு பேர் இருந்தனர், அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவித் பொலிஸார் கார் பலத்த சேதமடைந்ததுள்ளது என கூறியுள்ளனர்.