
தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் பலி
பண்டாரவளையில் இன்று புதன்கிழமை தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
உடஹேன தோட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புனகல தோட்டத்திற்குச் சொந்தமான உடஹேன பகுதியில் தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி சிகிச்சைக்காக கொஸ்லந்த கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
