தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி-குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் தேன் எடுப்பதற்காக சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.

அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாத தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள்துரை துரைராசா (வயது 51) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.