தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு : மூவர் கைது!
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பயணித்த வாகனத்தின் மீது கடந்த 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூன்று பேர் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
