தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்-

தேசிய மட்டப் புலியாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பாடசாலை பாண்ட் வாத்திய இசையுடன் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் என பலரும் புடைசூழ வாகனத்தில் பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர் , பழையமாணவர்கள் ,ஊர் மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்