தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மீனவர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்-

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மீனவர்கள் போராட்டம் முல்லைத்தீவு நகரில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரியே இன்றைய தினம் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ல. ஹேர்மன் குமார, பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் உட்பட பலர்வேறு அமைப்புக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்