
தேசிய மட்டத்தில் முதல் இடத்தை பெற்ற உப்புவெளி கமநல சேவை நிலையம்
-கிண்ணியா நிருபர்-
கடந்த வருடம் முழுவதும் சிறப்பாக தமது செயற் திறன்களை வெளிப்படுத்திய A, B,C தர கமநல சேவை நிலையங்களுள் ஒவ்வொரு பிரிவிற்குமான மாவட்ட மட்ட, மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட போட்டிகள் இடம்பெற்றது.
C தர பிரிவைச் சேர்ந்த கமநல சேவை நிலையங்களுக்கு இடையேயான போட்டியில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் து.தர்சானந்தன் தலைமையிலான உப்புவெளி கமநல சேவை நிலையமானது மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் மட்டுமின்றி தேசிய மட்டத்திலும் முதல் இடத்தை பெற்றுள்ளது..
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
