தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு

-அம்பாறை நிருபர்-

Srilanka pen club இன் இவ்வாண்டிற்கான தேசிய பெண் எழுத்தாளர் மகாநாடு எதிர்வரும் நவம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ளதாக அதன் ஸ்தாபகத் தலைவர் சம்மாந்துறை மஷூறா தெரிவித்தார்.

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலத்தில் நடைபெறவுள்ள இம் மகாநாட்டிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பான முதலாவது கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 4.00மணியளவில் Srilanka pen club தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியால மண்டபத்தில் இடம்பெற்றது.

மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இதுவரை அறுபத்தைந்து பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும், பெண்ணிலக்கியயம் சார்ந்த உரைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் நிகழ்வுகள் களைகட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு சம்மாந்துறை நிந்தவூர் அக்கரைப்பற்று சாய்ந்தமருது மருதமுனை அங்கத்தவர்கள் சமூகமளித்திருந்தனரென்பதும் குறிப்பிடத்தக்கது.