தேசிய புலனாய்வு பிரிவின் தகவலிற்கமைய கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ் நிருபர்-

அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட, யாழ்ப்பாணம் கற்கோவளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் ,  02 கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் மந்திகை பகுதியில் வைத்து நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த நபர் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த அரச புலனாய்வு பிரிவினர், நேற்று வியாழக்கிழமை விற்பனை நோக்கத்திற்க்காக கஞ்சாவை கொண்டு செல்லும்போது கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் நெல்லியடி பொலிஸார்,  இன்று வெள்ளிக்கிழமை சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படுத்தவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்