தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவித்தல்

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை சனிக்கிழமை காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும், என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை – மல்கிஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகளுக்கும் இதே காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும், கொட்டிகாவத்தை – முல்லேரிய உள்ளுராட்சி சபை பகுதிக்கும், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகளுக்கும் நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை மின்சார சபையின் முக்கிய பரமாரிப்பு வேலைகள் காரணமாக அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சாரம் இடைநிறுத்தப்படுவதினால் நீர் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படுகிறது.