தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் பதவியேற்பு
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக திரைப்பட இயக்குனர் சுதத் மஹதிவுல்வெவ இன்று திங்கட்கிழமை காலை பதவியேற்றார்.
பதவியேற்பு வைபவம் கொழும்பு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் பிரேமரத்ன தென்னகோன், ஊடகச் செயலாளர் ருவன் லியனாராச்சி, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ரவி கலுபஹன, தேசிய தொழிற்சங்க நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மஞ்சுள சிறிசோம மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்