தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

-மூதூர் நிருபர்-

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினை தோப்பூர் – அல்ஹம்றா மத்திய கல்லூரியின் வளாகம் இன்று புதன்கிழமை காலை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டது.

கல்லூரி முதல்வர் பி.பி.றிபாஸ் தலைமையில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாடசாலையின் உள்,வெளிப் பகுதிகளானது மாணவர்கள், ஆசிரியர்கள்,பாடசாலை சிற்றூழியர்களால் சிரமதானம் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழித்தல், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களிடையே நுளம்புகளால் பரவும் நோய்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு இத்திட்டமானது நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.