
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம்
-மஜித்புரம் நிருபர் தில்சாத் பர்வீஸ்-
சமூகப் பணி பயிலும் மூன்றாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் சமூகப்பணி பாடசாலையின் விரிவுரையாளர் வி தர்ஷன் வழிகாட்டலின் கீழ் மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பொது பணிப்பாளர் வைத்தியர் ரவீந்திர குமார அனுமதியுடன் இடம்பெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமின் நோக்கமாக சீதுவ லியானகேமுல்ல பிரதேச மக்களுக்கான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது
நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூகப்பணி பாடசாலையின் பணிப்பாளர் திரு.வரதராஜா ஜெயரூபன் மற்றும் அதிதிகளாக சீதுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரவி சில்வா, FPA நிறுவனத்தின் மருத்துவ இயக்குனர் வைத்தியர் நுஸ்ரத் நசூர்தின் மற்றும் நாரயம்பிட்ட இரத்த வங்கி மருத்துவ அதிகாரிகள், ஏனைய மருத்துவ அதிகாரிகள், விரிவுரையாளர்கள், கல்விசார் கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


