தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக பிரமோத்ய விக்ரமசிங்க நியமனம்

 

இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரமோத்ய விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

விளையாட்டு துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேசிய தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தெரிவுக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்:

பிரமோத்ய விக்ரமசிங்க (தலைவர்)

இந்திக டி சரம்

தரங்க பரணவிதான

வினோதன் ஜோன்

ரசஞ்சலி டி அல்விஸ்

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39 (1) பிரிவு மற்றும் 2025 மே 21 ஆம் திகதியிட்ட 2437/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.