தேசிய ஓய்வூதிய தினம்

தேசிய ஓய்வூதிய தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டும் தேசிய ஓய்வூதிய தினத்திற்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வலுவான, ஆரோக்கியமான மற்றும் தைரியமான வாழ்க்கை என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தேசிய ஓய்வூதிய தினத்தின் முக்கிய நிகழ்ச்சி இன்று (08) காலை 8 மணிக்கு களனியில் உள்ள வேதமுல்ல ஓய்வூதிய விடுதியில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எச். அபேரத்னவின் தலைமையில் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் ஓய்வுபெற்ற சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு பகுதியை அழைத்து அவர்களுக்காக விசேட மருத்துவ சிகிச்சை நடத்தப்படும்.

ஓய்வுபெற்றவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரின் திறமைகளை வெளிப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிற்கும் இந்தத் திட்டத்தை தங்கள் திறனுக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் நாடு முழுவதும் பரவியுள்ள ஓய்வூதிய சங்கங்களின் உதவியுடன் இன்று நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.