
தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் இணைந்து நடத்தும் இளைஞர் முகாம்
தேசிய விளையாட்டு துறை அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் என்பன இணைந்து நடத்தும் இளைஞர் முகாம் வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இன்று சனிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிலையப் பொறுப்பதிகாரி டி.சி நிலுக்ஷி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மௌன இறை வணக்கத்தை தொடர்ந்து, தேசிய இளைஞர் கீதம் இசைக்கப்பட்டு, சத்திய பிரமாணத்துடன் இன்றைய நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றது.
தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில், தலைமைத்துவ பயிற்சி,திறன் விருத்தி. ஆளுமை மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு உள்ளிட்ட இளைஞர் மேம்பாட்டு விடயங்கள் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது நாடளாவிய ரீதியில் 24 இளைஞர் முகாம் இது போன்று முன்னெடுக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண தேசிய இளைஞர் படையணி பணிப்பாளர் மேஜர் நிரஞ்சன் சந்திரதிலக, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பணிப்பாளர் திருமதி நிசாந்தி அருள்மொழி மற்றும் மாவட்ட இளைஞர் சேவைகள் அலுவலர்கள் சசிகுமார் சரஸ்வதி , தயாழசீலன் தகவல் நிலைய பொறுப்பதிகாரி ரம்சி பிரதேச செயலாக இளைஞர் சேவை அதிகாரிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் 24 கலைஞர் முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
மாவட்டத்தில் இருந்து சுமார் 200 இளைஞர் யுவதிகள் பயிற்சி முகாமில் பங்குபற்றி உள்ளனர்.
