
தேசிய இரத்தமாற்று சேவையின் விசேட அறிவித்தல்
குருதி கொடையாளர்களுக்கு தேசிய இரத்தமாற்று சேவை, விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் பாரியளவிலான இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டாமென தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இரண்டு வாரங்களுக்கு போதுமான இரத்தம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இரத்தம் வழங்க விரும்பும் தனிப்பட்டவர்கள், இரத்தமாற்று சேவையைத் தொடர்பு கொண்டு வருமாறும், இரத்தமாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
