தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்ய பகிரங்க பிடியாணை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த விடயம் தொடர்பில் வெலிகம பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை பிறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணைக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு நாளை புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24