தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க! – நரைமுடிக்கு Bye Bye
தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க!
அதுல இருந்து இயற்கை ஹேர் டை தயாரிக்கலாம்…
நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு தலைமுடி முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோரும் நரைத்த தலையுடன் சுற்றி திரிவது மனதிற்கு மிகவும் நெருடலான ஒன்றாகும்.
நடுத்தர வயதில் உள்ள சில ஆண்களெல்லாம் நரைக்கு அலட்டிக் கொள்ளாமல், ‘தல’ ஸ்டைலில், நரையே அழகு என சால்ட் அண்ட் பேப்பர் தோற்றத்தில் இருந்தாலும், பெண்கள் அப்படி இருக்கமுடியுமா? அவர்களுக்கு நகைகள் கூட அப்புறம்தான், தலை நரைத்து விட்டாலே, அதைப் பார்த்து பார்த்து, மனம் கலங்கி விடுவர்.
அவர்களின் மனப்பூர்வமான முயற்சிகளில் தவறில்லை, ஆயினும், இன்று கடைகளில் கிடைக்கும் தலைச்சாயங்கள் எல்லாம், இயற்கையானது தானா?
அவை எல்லாம் கலப்படம் இல்லாத இயற்கைச் சாயம் எனும் பெயருடன் வருவதும், பாதிப்பைத் தரக் கூடியவைகளே!
இதனால் என்ன ஆகிறது? நரை முடியை போக்க எண்ணி அதிகம் பேர், அந்த சாயங்களின் ஒவ்வாமையினால் உண்டாகும் உடல் தோல் அலர்ஜிக்கு மற்றும் முக கருமைக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நிலையே, உண்மையாக இருக்கிறது.
நரை என் ஏற்படுகிறது?
சில காலம் முன் வரை வீடுகளில் குழந்தை பிறந்தால், ஆணாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ள பாட்டிகள் குழந்தைகளுக்குத் தவறாமல் தலையில் எண்ணை தேய்ப்பார்கள். விளக்கெண்ணை அல்லது தேங்காய் எண்ணை தினமும் தலையில் தேய்த்து வருவார்கள்.
அவை குழந்தைகள் உடலுக்கும் தலை முடிகளுக்கும் நன்மை செய்து, முடிகளை நன்கு வளரச் செய்யும்.
மேலும், நரை என்பதே மிக அரிதாக அவர்களின் ஐம்பது வயதுகளின் இறுதியில் மட்டுமே, காணப்படும்.
எண்ணெயில்லா முடி :
இன்றைய நவீன மருத்துவம், குழந்தைகளுக்குத் தலையில் எண்ணை தேய்ப்பது மிகப் பெரிய தீங்கு என்று கூறுவதால், நாமும், நம் குழந்தைகளுக்கு இயல்பாக நலம் தரக்கூடிய, இயற்கை வைத்திய முறைகளை, பெரியோர் சொல்லியும் கேளாமல், ஒதுக்கி வைத்து விட்டோம்!
இப்போதும் கெடவில்லை செயற்கை டைக்களுக்கு பதிலாக இயற்கையான டை தயாரிக்கும் முறையை கற்றுக் கொள்ளுங்கள்.
இயற்கையான முறையில் எப்படி டை தயாரிக்கலாம்?
தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்குங்கள். பின்னர் அதனை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வெயிலில் சில நாட்கள் வைக்க வேண்டும்.
பிறகு அதை சிறிது எடுத்து, தலைமுடிகளில் தடவிவர வேண்டும். அப்படியே இருக்கலாம், அல்லது தலையை அலச வேண்டுமென்றால், சில மணி நேரம் கழித்து அலசி விடலாம்.
இதுபோல சில தினங்கள் செய்து வந்தால் உங்கள் நரைத்த முடிகள் மெல்ல மெல்ல மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.
மேலும், தேங்காய் எண்ணை உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, மனதில், செயல்களில் ஒரு தெளிவையும் கொடுக்கும். இதுதான், நமது பாரம்பரிய இயற்கை வைத்தியத்தின் தனிச் சிறப்பு.
அப்பறம் என்ன இதுக்கு பிறகு நரைமுடிக்கு Bye Bye தான்