தேங்காயின் விலை அதிகரிப்பு

சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளிவந்துள்ளது.

அதன்படி ரூபா 80-90 வரை விற்கப்பட்ட தேங்காய் ஒன்றின் விலை ரூபா 100-150 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சடுதியாக தற்போது அனைத்து பொருட்களின் விலைகளும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.