தெஹிவளை விபத்தில் இரு வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்
தெஹிவளை மேம்பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் முச்சக்கரவண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து தெஹிவளையிலிருந்து தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து தீ கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதியே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு வாகனங்களும் தீயில் எரிந்து நாசமானதுடன், விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
