தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சம் அப்பிள்கள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இறக்குமதிச் செய்யப்பட்ட அப்பிள்கள், தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் (CICT) யாரும் பொறுப்பேற்காமல் சுங்க பிரிவில் இருந்த ஒரு இலட்சம் அப்பிள்கள் (மொத்தம் 24,000 கிலோ) இவ்வாறு தெஹிவளைமிருகக் காட்சி சாலை விலங்குகளின் உணவுக்காக வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, இறக்குமதிச் செய்த உரிமையாளர்கள், அதனை பெற்றுக் கொள்ளாமையால், துறைமுக அபிவிருத்தி விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவின் தீர்மானத்துக்கு அமைய மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளிடம் அவை நேற்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டன.