தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பஞ்சவர்ணக் கிளி திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பஞ்சவர்ணக் கிளி திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுள்ள நீல மஞ்சள் நிறம் கொண்ட பஞ்சவர்ணக் கிளியொன்று கடந்த 4 ஆம் திகதி இரவு திருடப்பட்டதாகக் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கூண்டில் 30 பஞ்சவர்ணக் கிளிகள் இருந்த நிலையில், அதிலிருந்து ஒரு கிளி காணாமற்போயுள்ளதாகக் கடமையிலிருந்த கூண்டின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மிருகக்காட்சிசாலையின் நிர்வாகம் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிருகக்காட்சிசாலையில் விலங்கொன்று காணாமற்போனால் உயர் அதிகாரியே பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யவேண்டும்.

ஆனால் கிளி காணாமல் போனமை தொடர்பில் விலங்குகள் குறித்த அனுபவமற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டிருப்பது கேள்விக்கு உள்ளாகியுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News