
தெஹிவளையில் 11 மாடி கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து கைக்குண்டு மீட்பு
தெஹிவளை அநாகரிய தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த 11 மாடி கட்டிடத்தின் 5வது மாடியில் கைக்குண்டு போன்ற ஒரு பொருளுடன் பொலித்தீன் பை ஒன்று காணப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெஹிவளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில், குறித்த பொருள் கைக்குண்டு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தகவலின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் கட்டிடத்தில் இருந்து கைக்குண்டை அகற்றியுள்ளனர்.
