
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு
தெஹிவளை மெரைன் ட்ரைவ் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மெரைன் ட்ரைவ் பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
