
தெஹியோவிட்டவில் : விபத்து 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்
தெஹியோவிட்டவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை-அவிசாவளை சாலையில் தெஹியோவிட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை காலை பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த பயணிகள் சிறிய காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.