தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் மணிக்கூட்டுக் கோபுரம் திறந்து வைப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை சந்தியின், வட மேற்கு மூலையாக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம், இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகனால் திறந்து வைக்கப்பட்டது.

இம் மணிக்கூட்டுக் கோபுரம், தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவன் தணிகாசலம் விஜயகுமாரின் நிதிப்பங்களிப்புடன், அவரது தந்தை கந்தையா தணிகாசலம் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.