
தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம்
-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹா உற்சவத்தின் தீர்த்தோற்சவ திருவிழா இன்று வியாழக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்காதேவிக்கு மற்றும் விநாயகர் முருகன் ஆகிய தெய்வங்களுக்கான விஷேட அபிஷேசக ஆராதனை, என்பன இடம்பெற்று, பின்னர் வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளிய வாகனபீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இவ்வாலயத்தின் மஹாஉற்சவம் கடந்த 28.08.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹாஹோற்சவ திருவிழாக்கள் யாவும் நிறைவடைகின்றன.
இந்த தீர்த்தோற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.



