தெலுங்கு பாடல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இவ்வாறு தொடர்ந்து நடன அசைவுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த வந்த நிலையில், தெலுங்கானா மகளிர் ஆணைக்குழு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அருவருப்பாகக் காட்டுவது தவறு எனவும் நடன இயக்குநர்கள், பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தவறும் பட்சத்தில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெலுங்கானா மகளிர் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க