தெற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை நிலவி வரும் நிலையில், தெற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மேற்படி கடற்பரப்புகளில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறும் இது தொடர்பில் திணைக்களத்தினால் வெளியிடப்படும் அவ்வப்போதான முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரித்து மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.