தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சில பகுதிகள் புனரமைப்பு

கொட்டாவைக்கும் தொடங்கொடவிற்கும் இடையிலான 19ஆவது கிலோமீற்றரிலிருந்து 44ஆவது கிலோமீற்றர் வரையிலான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை புனரமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தெரிவு செய்யப்பட்ட குறைந்த ஏலதாரரான Maga Engineering Pvt நிறுவனத்திற்கு உரிய ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்த பகுதியிலுள்ள வீதிகள் சமீப காலமாக உடைந்து காணப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது