தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாரவூர்தி இரண்டு வேன்கள் மற்றும் கார் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.