தெற்கில் பாரிய மாற்றங்கள் உருவாகும் – சுமந்திரன் ஆரூடம்

-யாழ் நிருபர்-

நடைபெறவிருக்கின்ற ஊள்ளூராட்சித்தேர்தலில் தெற்கிலே பாரிய மாற்றங்கள் உருவாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சமந்திரன் தெரிவித்தார் .

உள்ளூராட்சித் தேர்தலின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அலுவலத்தில் கையளித்தபின்னர் ஊடகவியாளர்கள் சந்திப்பின் பின்னர் இக்கருத்தினை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியகூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தனியாக வேறாக போட்டியிடுகின்றது. இந்த தேர்தல் முறையிலே கட்சிகள் தனித்னியாக போட்டியிடுவது சால சிறந்தது அது இலங்கை தமிழரசுக்கட்சியுடைய கருத்தாக இருக்கின்றது.

இதன் முடிவுகள் வரும் போது நாங்கள் சேர்ந்து கூட்டமைப்பாக இருப்பதை இருந்து காட்டுவோம்.

நடைபெறவிருக்கின்ற ஊள்ளூராட்சித்தேர்தலிலே நாட்டிலே எப்படியாவது அரசியல் சூழ்நிலை மாறியிருக்கின்றதை சோதித்து பார்க்கின்ற தருணமாக இருக்கின்றது .

தெற்கிலே பாரிய மாற்றங்கள் உருவாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையிருக்கின்ற கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று சொல்லப்படுகின்றது.

அங்கு மாற்றங்கள் நிகழலாம் வடக்கிலும், கிழக்கிலும் பிரதான கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கின்ற தாய்வீடு அதனை மக்கள் ஜனநாயக ரீதியான தீர்ப்பின் மூலம் வழங்கவேண்டும்,- என்றார்