தென் மாகாணத்தில் நாளை துக்க தினம்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை தென் மாகாணத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே குறித்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

அந்த தீர்மானத்தின்படி, தென் மாகாணத்தில் அமைந்துள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் நாளை தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.