
தென் பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுகளுக்கு அருகே 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் தோன்றியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது
எனினும், இதுவரை ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது
