தென் சூடானின் துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் வீட்டை இராணுவம் முற்றுகை!

தென் சூடானின் துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் வீட்டை இராணுவம் முற்றுகையிட்டுள்ளது.

தென் சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வருகிற நிலையில் உள்நாட்டு போரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதால் அவர்களுக்கு எதிராக துணை இராணுவம் போரிட்டு வருகிறது.

இந்தச் சண்டையில் பொதுமக்கள்,இராணுவ வீரர்கள் உட்பட 5 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் ஜனாதிபதி சல்வா கீர் மற்றும் துணை ஜனாதிபதி ரீக் மச்சாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உள்நாட்டு போர் இன்றுவரை தொடர்கின்றது.

தென் சூடானில் வடக்கு பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில், ரீக் மச்சாரின் ஆதரவாளரான துணை இராணுவத் தளபதி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார் .

இதையடுத்து எரிசக்திஅமைச்சர் அவரது குடும்பத்தினர் மற்றும் காவலாளர்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த கைதுகளுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் ஆதரவு படை வடக்கு பகுதியில் உள்ள இராணுவத் தளத்தை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், தலைநகர் ஜூபாவில் உள்ள துணை ஜனாதிபதி ரீக் மச்சாரின் வீட்டை இராணுவம் நேற்று புதன்கிழமை முற்றுகையிட்டது.

இதனால் தென் சூடானில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.