தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வி

தென் கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோல்வியில் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரேரணையை மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையில் நிறைவேற்றுவதற்கு தென்கொரியாவின் எதிர்க்கட்சி தவறியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தென் கொரியா ஜனாதிபதி யூன் சுக் யோல் அவசரமாக இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

இதனையடுத்து, தென் கொரியாவின் சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்றத்துக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதியை நீக்கம் செய்யக்கோரி ஒன்று திரண்டனர்.

இந்தநிலையில், குறித்த இராணுவச் சட்டத்தினை அமுல்படுத்தவதற்கு எதிராக நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையொன்றை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன.

ஜனாதிபதி யூன் சுக் யோல், இராணுவச் சட்டத்தை அறிவித்ததற்காக இன்றைய தினம் பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியதுடன், மீண்டும் அதனை அமுல்படுத்தப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்