
தென் எருவில் பற்று பிரதேச சபையினால் உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மகிழூர் கலாசார மண்டபத்தில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் MRF றிப்கா ஹபீன், சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அ.உதயசூரிய , உப தவிசாளர் அ.வசீகரன், களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி N.M பகினிகஹவெல பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள்,எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் MRF றிப்கா ஹபீன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினரால் , மலர்மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.இதன் போது கருத்து தெரிவித்த அவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் வேலைத்திட்டங்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதன் போது பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் மேடையில் அரங்கேறின.






