
தென்னிந்திய நடிகர் ரவிக்குமார் காலமானார்
தென்னிந்திய நடிகர் ரவிக்குமார் தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மலையாளத்தில் பல படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் ரவிக்குமார் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழில் பாலசந்தர் இயக்கிய ‘அவர்கள்’ படத்தின் மூலம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சுஜாதா ஆகியோர் உடன் இணைந்து நடித்து தமிழில் நடிகராக அறிமுகமானார்.
திரைத்துறையைச் சேர்ந்த பலரும் ரவிக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்