
தென்னாப்பிரிக்காவில் பஸ் விபத்து- உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப்பாதையில் பஸ் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலியானவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் 49 பேர் காயமடைந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் லூயிஸ் டிரிச்சார்ட் நகருக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
