தென்னாபிரிக்காவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
தென்னாபிரிக்காவில் மலைப் பிரதேச வீதியூடாக சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து, கவிழ்ந்ததில் 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்தில் பலர் காயமடைந்ததாகவும் அவர்கள் மீட்புப் பணியாளர்களின் ஒத்துழைப்போடு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்காவின் தெற்கே ஈஸ்டர்ன் கேப் பகுதியிலிருந்து வடக்கே பிரிட்டோரியா தலைநகரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள லூயிஸ் ட்ரைகார்ட் நகரின் அருகாமையில் நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்த இந்த பஸ், மலைப்பாங்கான பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே பள்ளத்தில் உருண்டு, வீழ்ந்து, மலையடிவாரத்தில் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஸிம்பாப்வே, மலாவி போன்ற நாடுகளைச் சேர்ந்த பலர் உள்ளடங்குவதாகவும் களத்தில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.