
தென்னந்தோப்பில் திருடியவர் மீது துப்பாக்கி சூடு
தென்னந்தோப்பு ஒன்றில் தேங்காய் திருடிக்கொண்டிருந்த நபர் ஒருவரை தோட்ட காவலாளி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இச்சம்பவம் கந்தானை கட்டுவெல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கந்தானை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பாதுக்க வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
