தென்கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வெளிநாடுகளிற்கு செல்ல முடியாது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்கறிஞர் இதனை அறிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்தவாரம் மார்ஷல் பிரகடனம் செய்தமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்