தென்கொரிய காட்டுத்தீ: 27 பேர் பலி
தென்கொரியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
86,500 ஏக்கர் நிலம் தீக்கரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீயில் எரிந்து சேதமடைந்து உள்ளன.
தென் கொரியாவின் தென்கிழக்கு நகரமான, உய்சோங்கில் ஏற்பட்ட காட்டுத்தீயானது பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகக் கட்டுப்பாட்டை மீறி வேகமாகப் பரவுவதாகத் தென் கொரிய அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
