தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா பகுதியில் வருகின்ற 19 ஆம் திகதி ஜி 7 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு முன்னர் ஜப்பான் பிரதமர் தென்கொரியா செல்ல திட்டமிட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஜப்பான் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்
வருகின்ற 7 ஆம் 8 ஆம் திகதிகளில் தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும், இரு நாடுகளின் உறவுகளை வளர்ப்பதற்கான வாய்ப்பாக அது அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் போது வேகமாக மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகள் குறித்து வெளிப்படையாக கருத்துகளை பரிமாறிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்