
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு : ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சம் ரூபா மோசடி
தென் கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் குழு நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.
இந்த பெண் ஒரு கோடியே அறுபத்தைந்து இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரியாவில் நெசவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தப் பெண் பணம் மோசடி செய்துள்ளார்.
குறித்த பெண் மீது 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், பல்வேறு நபர்களிடம் இருந்து 05 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகள் சந்தேகநபருடன் சாமர்த்தியமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணியகத்திற்கு வரவழைத்து கைது செய்தனர்.
தென் கொரியாவில் வெல்டிங் துறையில் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய உரிமம் பெற்ற சில வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் நெசவுத் துறையில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் போது அல்லது பணத்தைச் செலுத்தும் முன், 19 89 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்து, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், பணியகத்தின் உரிமம் பெற்ற நிறுவனம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
