
தூர பிரதேச பேருந்துகளுக்கான நேர அட்டவணை இன்று முதல் அமுல்
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துக்களின் தூரப் பிரதேச சேவைக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு சிலாபம், கொழும்பு புத்தளம், கொழும்பு ஆனமடுவ, கொழும்பு எலுவான்குளம் மற்றும் கொழும்பு கல்பிட்டி ஆகிய மார்க்கங்களில் இந்த ஒருங்கிணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் நீர்கொழும்பு கல்பிட்டி, கொழும்பு மன்னார், கொழும்பு தலைமன்னார், கொழும்பு குளியாப்பிட்டி, கொழும்பு நிக்கவரட்டிய, கொழும்பு அநுராதபுரம், கொழும்பு வவுனியா, கொழும்பு-கிளிநொச்சி, கொழும்பு யாழ்ப்பாணம், கொழும்பு காங்கேசன்துறை, கொழும்பு காரைநகர் மற்றும் கொழும்பு துனுக்காய் ஆகிய பகுதிகளுக்கும் புதிய நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளது.