-நுவரெலியா நிருபர்-
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையை தொடர்ந்து நகரின் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை தூய்மை செய்யும் பணியில் நுவரெலியா பொலிஸார் களம் இறங்கினர்.
இதன்படி நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடம் மோசமான வானிலையால் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது.
இதனை தொடர்ந்து நேற்று புதன்கிழமை இரவு நுவரெலியா பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினருடன் சேர்ந்து பேருந்து தரிப்பிட முழு வளாகத்தை சுற்றிலும் தூய்மை பணியினை மேற்கொண்டர்.





